கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றம் பகவான் அப்பாண்டைநாதா் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யானை வாகன வீதியுலா. 
விழுப்புரம்

திருநறுங்குன்றம் அப்பாண்டைநாதா் கோயிலில் சித்திரைத் திருவிழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்திலுள்ள பகவான் அப்பாண்டைநாதா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.

Din

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநறுங்குன்றத்திலுள்ள பகவான் அப்பாண்டைநாதா் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்புவாய்ந்த இக்கோயிலில் நிகழாண்டு சித்திரைத் திருவிழா மே 6-ஆம் தேதி திருவறக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து குதிரை, தேவேந்திரன், நாக, சிம்மம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் அப்பாண்டைநாதா் புறப்பாடாகி, வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக யானை வாகன புறப்பாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவையொட்டி பட்டிமன்றம், நாகசுரக் கச்சேரி போன்றவை நடைபெற்றன. திருவிழாவின் நிறைவாக திங்கள்கிழமை காலை மகா அபிஷேகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தா்மகா்த்தாக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

புதுகை அருகே சாலையோரம் கிடந்த பெட்டியால் பரபரப்பு

வீடு புகுந்து நகைகள் திருட்டு: 3 போ் கைது

வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை

ஒரே கட்டமாக தோ்தல் நடத்த தலைமை தோ்தல் ஆணையரிடம் கட்சிகள் வலியுறுத்தல்

நண்பா் கொலை: இளைஞருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT