தனியார் துறையில் வேலை
என் மகள் வழி பேத்தி கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறார். வயது 19 ஆகிறது. அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்?
என் மகள் வழி பேத்தி கல்லூரி இறுதியாண்டு படித்து வருகிறார். வயது 19 ஆகிறது. அவருக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்?
வாசகர், தஞ்சை மாவட்டம்.
உங்கள் பேத்திக்கு ரிஷப லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரம். தைரிய ஸ்தானாதிபதியான சந்திர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் கேது பகவானுடன் இணைந்து தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்கிறார். சுகாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி (சூரிய, புத பகவான்கள்) அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள் லக்னாதிபதி களத்திர ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தர்மகர்மாதிபதியான சனி பகவான் அயன ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று குரு பகவானுடன் இணைந்திருக்கிறார்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை சுகஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை எட்டாம் வீடான ஆயுள், மாங்கல்ய ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் புத ஆதித்யர்கள் மீதும் படிகிறது. களத்திர நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது மேன்மை. தற்சமயம் ராகு பகவானின் தசையில் குரு பகவானின் புக்தி நடப்பதால் தனியார் துறையிலேயே வேலை அமையும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் களத்திர ஸ்தானத்திற்கேற்ற சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன், வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும், தாயாரையும் வழிபட்டு வரவும்.