முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

உள்நாட்டில் மேற்படிப்பு

என் மகள் மனிதவளத் துறையில் மேற்படிப்பு முடித்து நல்ல நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர் இந்த வேலையிலேயே தொடர்வது நல்லதா? அல்லது வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்கலாமா?

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


என் மகள் மனிதவளத் துறையில் மேற்படிப்பு முடித்து நல்ல நிறுவனத்தில் பணியாற்றுகிறார். அவர் இந்த வேலையிலேயே தொடர்வது நல்லதா? அல்லது வெளிநாட்டுக்கு அனுப்பி மேற்படிப்பு படிக்க வைக்கலாமா?  

-வாசகி, சென்னை.

உங்கள் மகளுக்கு துலாம் லக்னம், துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம். லக்னம், எட்டாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிர பகவான், எட்டாம் வீட்டிலேயே (மாங்கல்ய ஸ்தானம்) ஆட்சி பெற்று, இரண்டு, ஏழாம் வீட்டிற்கதிபதியான செவ்வாய் பகவான், ஒன்பதாம் வீட்டிற்கதிபதியான புத பகவானுடன் இணைந்திருக்கிறார். சுக, பூர்வ புண்ணியாதிபதியான சனி பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் கேது பகவானுடன் இணைந்திருக்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் சூரிய பகவான் அமர்ந்து, தைரிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் குருபகவானால் நேர் பார்வையாகப் பார்க்கப்படுகிறார். குரு பகவானின் ஐந்தாம் பார்வை களத்திர நட்பு ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் படிகிறது. அவருக்கு தற்சமயம் குரு பகவானின் தசையில் புத பகவானின் புக்தி நடக்கிறது. அவரை உள்நாட்டிலேயே மேற்படிப்பை படிக்க வைக்கலாம். இன்னும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு திருமண முயற்சிகளை மேற்கொள்ளலாம். படித்த நல்ல வேலையில் உள்ள வரன் உள்நாட்டிலேயே அமைந்து திருமணம் நடைபெறும். எதிர்காலம், மணவாழ்க்கை சிறப்பாக அமையும். 

முழு கட்டுரையைப் படிக்க →