முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

தனியார் துறையில் முன்னேற்றம் 

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னம், சுகாதிபதி குரு பகவான் லக்னத்தில் மூலத் திரிகோணம் அடைந்து, பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகத்தைப் பெற்று ஐந்தாம்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


என் மகனுக்கு 36 வயதாகிறது. எப்பொழுது திருமணம் நடக்கும்?  அவருக்கு அரசு வேலை கிடைக்குமா அல்லது தனியார் வேலையா? 

-வாசகி, திருச்சி. 

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னம், சுகாதிபதி குரு பகவான் லக்னத்தில் மூலத் திரிகோணம் அடைந்து, பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகத்தைப் பெற்று ஐந்தாம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தர்மகர்மாதிபதிகளான ஆட்சி பெற்ற சூரிய பகவானையும், புத பகவானையும் பார்வை செய்கிறார். இதனால் சிவராஜயோகமும், புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது. தற்சமயம் குரு மஹா தசையில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானின் புக்தி நடக்கத் தொடங்கி இருப்பதால் இன்னும் ஓராண்டுக்குள் திருமணம் கைகூடும். தனியார் துறையிலேயே நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குரு பகவானையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

முழு கட்டுரையைப் படிக்க →