ஜோதிட கேள்வி பதில்கள்

முதுநிலை பட்டப்படிப்பு படித்துள்ள எனது மகனுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? வேலையும் சரியாக அமையவில்லை. எப்போது வேலை கிடைக்கும்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?  - வாசகர், சாம்ராஜ்பேட்டை

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி சூரியபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும் நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார்.

DIN

உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி சூரியபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருந்தாலும் நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி அயன ஸ்தானத்தில் உச்சம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியில் மூலதிரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அயன ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் (உச்சம் பெற்றிருக்கும் குருபகவானுடன் இணைந்திருப்பதால்) பெற்று அமர்ந்திருக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றமர்ந்திருந்தாலும் களத்திர ஸ்தானத்திற்கு பன்னிரண்டாம் வீட்டில் ஆட்சிபெற்றிருப்பது சிறு குறை. மற்றபடி லாபாதிபதி லாப ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்றிருப்பது சிறப்பு. புத ஆதித்ய யோகம், குருமங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளதும் சிறப்பு. தற்சமயம் செவ்வாய் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இதனால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தகுதிக்கேற்ற உத்தியோகம் அமைந்துவிடும். திருமணமும் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாசலில் விரியும் வாழ்வியல் அறிவியல்

தேவைதான் துண்டிக்கும் உரிமை!

பாஜக இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

கிறிஸ்துமஸ்: வீடுகளில் ஒளிரும் மொரோவியன் ஸ்டாா்கள்

நாகை: தாளடி மறுசாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

SCROLL FOR NEXT