எனது சுய தொழில் (டிராவல்ஸ்) நல்ல முறையில் பெருகி உயர்வாக வாழ வேண்டும். நடக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?
உங்களுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் அயன ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று ஆட்சி பெற்றுள்ள சூரியபகவானுடன்
குருபகவானை வழிபடவும்
- வாசகர், தெள்ளார்
உங்களுக்கு கன்னி லக்னம், கும்ப ராசி, சதய நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான புதபகவான் அயன ஸ்தானத்தில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்று ஆட்சி பெற்றுள்ள சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில், ருணம், ரோகம் சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஐந்தாம் வீட்டிலேயே ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். சுக, களத்திர ஸ்தானாதிபதியான குருபகவான், தைரிய, அஷ்டாமாதிபதியான செவ்வாய்பகவானுடன் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார்.
Advertisement
இதனால் குருமங்கள யோகம் உண்டாகிறது. குருபகவானின் ஐந்தாம் பார்வை பூர்வபுண்ணிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானின் மீதும், ஏழாம் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீதும், ஒன்பதாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும் படிகிறது. தற்சமயம் லக்ன யோக காரகரான சனிபகவானின் தசையில் புதபகவானின் புக்தி இன்னும் இரண்டாண்டுகள் வரையிலும் நடக்கும். வண்டி வாகன துறைகளுக்கு சுக்கிரபகவானே காரகமாவதால் அவர் லக்ன சுபராக ஆவதாலும் இந்த டிராவல்ஸ் தொழில் உங்களுக்கு ஏற்றதாகவே அமைகிறது. அந்த காலகட்டத்தில் நீங்கள் செய்து வரும் தொழில் படிப்படியாக மேன்மை அடையத்தொடங்கும். படித்த பெண் அமைந்து திருமணமும் கைகூடும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.