முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

சொந்தக் கடை வைக்கலாம்!

நான் தையல் தொழில் செய்து வருகிறேன். சில மாதங்களாக வருமானம் மிகவும் குறைவு. எப்பொழுது நல்ல வருமானம் கிடைக்கும்? என் ஜாதகப்படி மற்றவர்களுக்காக உழைக்க வேண்டுமா... அல்லது சொந்தக் கடை வைத்து நடத்தலாமா? 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
பகிர்:

நான் தையல் தொழில் செய்து வருகிறேன். சில மாதங்களாக வருமானம் மிகவும் குறைவு. எப்பொழுது நல்ல வருமானம் கிடைக்கும்? என் ஜாதகப்படி மற்றவர்களுக்காக உழைக்க வேண்டுமா... அல்லது சொந்தக் கடை வைத்து நடத்தலாமா? 

-வாசகர், காஞ்சிபுரம். 

உங்களுக்கு ரிஷப லக்னம் என்று வருகிறது; மிதுன லக்னம் அல்ல. சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம். லக்னம், ஆறாமதிபதியான சுக்கிர பகவான் தொழில் ஸ்தானத்திலமர்ந்து சுக ஸ்தானத்திலுள்ள சந்திர பகவானைப் பார்ப்பது சிறப்பு. இதனையும் "கஜகேசரி யோகம்' என்பார்கள். அதோடு சுக்கிர பகவானும் வர்கோத்தமத்தில் இருக்கிறார். சுகாதிபதி சூரிய பகவான் பூர்வ புண்ணியாதிபதி புத பகவான் ஆகியோர் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தர்ம கர்மாதிபதியான சனி பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் சனி மஹா தசையில் சுக்கிர புக்தி அடுத்த ஆண்டு இறுதிவரை நடப்பதால் சிறிய முதலீட்டில் சொந்தக் கடை வைக்கலாம். எதிர்காலம் சிறப்பாக அமையும் பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

முழு கட்டுரையைப் படிக்க →