முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

பாவக மாற்றத்தால்  ராசி மாறாது! 

என் தம்பி மகனுக்கு கடக ராசியா? சிம்ம ராசியா? பாவத்தில் சந்திரன் கடகத்தில் இருக்கிறார். உயர்கல்வி யோகம் உண்டா? தந்தைக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
பகிர்:

என் தம்பி மகனுக்கு கடக ராசியா? சிம்ம ராசியா? பாவத்தில் சந்திரன் கடகத்தில் இருக்கிறார். உயர்கல்வி யோகம் உண்டா? தந்தைக்கு எப்போது நிரந்தர வேலை கிடைக்கும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்? 

-வாசகர், பொள்ளாச்சி.

உங்கள் சகோதரர் மகனுக்கு கடக லக்னம், சிம்ம ராசி, மகம் நட்சத்திரம். லக்னாதிபதியான சந்திர பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். அனைத்து ஜாதகங்களுக்கும் லக்னாதிபதியின் சுப பலம் அவசியமாகும் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். 
பொதுவாக லக்னாதிபதி நவாம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றால் வாழ்க்கை படிப்படியாக வளர்ச்சி அடைந்து எதிர்காலத்தில் நல்ல நிலையை எட்டி விடுவார்கள் என்று கூறவேண்டும். 
ஐந்து மற்றும் பத்தாம் வீட்டுக்கதிபதியான செவ்வாய் பகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். 
ஆறாம் வீட்டிற்கும், ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் ஆறாம் வீடான தன் மூலத் திரிகோண வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சூரிய பகவானின் மீதும் (சிவராஜ யோகம்) புத பகவானின் மீதும், ஏழாம் பார்வை அயன ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் செவ்வாய் பகவானின் மீதும் (குரு மங்கள யோகம், தர்மகர்மாதிபதி யோகம்), ஒன்பதாம் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கமர்ந்திருக்கும் சந்திர பகவானின் மீதும் (குருச்சந்திர யோகம்) சனி, கேது பகவான்களின் மீதும் படிகிறது. 
குடும்பாதிபதி சூரிய பகவான் தொழில் ஸ்தானத்தில் உச்சம், வர்கோத்தமம், திக் பலம் பெற்றமர்ந்திருக்கிறார். அவருடன் புத பகவான் வர்கோத்தமத்தில் ஒரே பாகையில் அமர்ந்து நிபுணத்துவ யோகத்தைப் பெறுகிறார். 
புத பகவான் சூரிய பகவானுக்கருகிலேயே பெரும்பாலான காலங்களில் சஞ்சரிப்பதால், புத பகவானுடைய பலம் அஸ்தமன தோஷத்தால் குறையாது என்பதும், புத பகவானின் காரகத்துவங்களும், ஆதிபத்ய விசேஷங்களும் பல மடங்குசிறப்பாக வேலை செய்யும் என்பதும் அனுபவ உண்மை.
சுக ஸ்தானத்திற்கும், லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். ஏழாம் வீட்டிற்கும், எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
ராகு பகவான் எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியையும், கேது பகவான் இரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியையும் அடைகிறார்கள். 
பாவச் சக்கரத்தில் ராசியாதிபதி சந்திர பகவான் கடக ராசியில் அமர்ந்திருப்பதால் "ராசி மாறிவிடும்' என்று புரிந்து கொள்ளக்கூடாது. சந்திர பகவான் பாவத்தில் கடக ராசியில் இருப்பதால் லக்னாதிபதி சற்று கூடுதல் பலம் பெற்றிருக்கிறார் என்று புரிந்து கொண்டு பலன் சொல்ல வேண்டும். 
கல்வி ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதாலும், கல்விக் காரகரான புத பகவான் சூரிய பகவானுடன் பலமாக இணைந்திருப்பதாலும், சட்டம், மேலாண்மைத் துறை படிப்புகள் ஏற்றது. பொறியியல் படிப்பில் சிவில் மெக்கானிக்கல் படிப்பு ஏற்றது. உயர்கல்வி கற்கும் யோகமும் உள்ளது. 
பித்ரு காரகரான சூரிய பகவான் உச்சம் பெற்றிருப்பதால் தந்தைக்கும் உயர்வுண்டாகும். தற்சமயம் சுக்கிர பகவானின் தசையில் ராகு பகவானின் புக்தி நடப்பதால் இன்னும் ஓராண்டுக்குள் அவரது தந்தையின் பணி நிரந்தரமாகும். அரசு கிரகங்கள் வலுவாக இருந்தாலும், சர ராசிகள் சிறப்பான பலம் பெற்றிருப்பதால் தனியார் துறையில் உயரிய பதவிகளைப் பெற்று வெளிநாடு செல்லும் யோகமும் உள்ளது. பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.'''

முழு கட்டுரையைப் படிக்க →