முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

முதியோர் ஓய்வூதியம் கிடைக்கும்!

வறுமையில் வாடும் எனக்கு முதியோர் பென்ஷன் ரூ.1000 கிடைக்குமா? ஆயுள், ஆரோக்கியம் பற்றியும் கூறவும்!

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:29 PM
பகிர்:


வறுமையில் வாடும் எனக்கு முதியோர் பென்ஷன் ரூ.1000 கிடைக்குமா? ஆயுள், ஆரோக்கியம் பற்றியும் கூறவும்!

-வாசகர், பெங்களூரு.

உங்களுக்கு மகர லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னாதிபதி, குடும்பாதிபதி சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பூர்வ புண்ணியாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி சுக்கிர பகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் அஷ்டமாதிபதியான சூரிய பகவானுடனும், ராகு பகவானுடனும் இணைந்திருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்குமதிபதியான குரு பகவான் தைரிய ஸ்தானத்திலமர்ந்து, ஐந்தாம் பார்வையாக களத்திர நட்பு ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் அங்கமர்ந்திருக்கும் லக்னாதிபதியையும், ஒன்பதாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். அதனால் இறுதிவரை உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் ஏதோ ஒரு வழியில் கிடைத்து விடும் என்று கூறவேண்டும். 

தற்சமயம், புத பகவானின் தசையில் சந்திர பகவானின் புக்தி நடப்பதால் இந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் முதியோர் ஓய்வூதியம் கிடைத்துவிடும். பரிகாரம் எதுவும் தேவையில்லை. சனி பகவானும், புத பகவானும் வலுத்திருப்பதால் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாகவே அமையும். 

முழு கட்டுரையைப் படிக்க →