முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

தனியார் துறையில் வேலை

என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:25 PM
பகிர்:


என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்பொழுது நடக்கும்?

-வாசகர், போடி

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னம், சுகாதிபதி குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக சுக ஸ்தானமான தன் ஆட்சி வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் உச்சம் பெற்றிருக்கும் சுக்கிர பகவானையும், ஒன்பதாம் பார்வையாக ஆறாம் வீட்டையும் அங்கமர்ந்திருக்கும் கேது பகவானையும் பார்வை செய்கிறார். பூர்வ புண்ணியாதிபதி, அயன ஸ்தானாதிபதியான செவ்வாய் பகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பாக்கியாதிபதியான சூரிய பகவான் தைரிய ஸ்தானத்தில் மூலத் திரிகோணம் பெற்றுள்ள தைரியாதிபதி, புத பகவானுடனும் இணைந்து அவர்கள் மூவரின் பார்வையும் பாக்கிய ஸ்தானத்தின் மீது படிகிறது.

தற்சமயம், சனி பகவானின் தசையில் புத பகவானின் புக்தி அடுத்த மாதம் வரை நடக்கும். இந்த ஆண்டுக்குள் தகுதியான வேலை தனியார் துறையில் கிடைக்கும். அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு உறவிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானை வழிபட்டு வரவும்.

முழு கட்டுரையைப் படிக்க →