முகப்பு
ஜோதிட கேள்வி பதில்கள்

நான் வாழ்க்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்கள் பட்டு விட்டேன். குடும்பமும் இல்லை. சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

நான் வாழ்க்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்கள் பட்டு விட்டேன். குடும்பமும் இல்லை. சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

நான் வாழ்க்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்கள் பட்டு விட்டேன். குடும்பமும் இல்லை. சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். 16 வருடங்களாக செய்யாத தவறுக்காக நீதிமன்றத்திற்குச் சென்று வருகிறேன். மனதில் அமைதி இல்லை. சிறிய முதலீட்டில் புதிய தொழில் செய்ய வாய்ப்பு வருகிறது. எண்ணெய், பூஜைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் இவற்றில் எந்தத் தொழில் ஏற்றது? எப்பொழுது வழக்கு முடியும்?  

-வாசகர், திருப்பூர். 

உங்களுக்கு கடக லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரம். லக்னாதிபதி, களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் சுய சாரத்தில் (திருவோணம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
லக்னாதிபதி, லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. லக்னாதிபதி வலுத்தால் சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை, கெளரவம், அந்தஸ்து உயரும். உயிர் ஸ்தானம் வலுத்திருந்தால் உடல் வலிமை, மனவளம், ஆளுமைத்திறன் ஆகியவை இயல்பாகவே அமையும். 
அதோடு, லக்னாதிபதிக்கு கேந்திரத்திலும், திரிகோணத்திலும் கிரகங்கள் இருந்தால் வாழ்க்கை சோடை போகாது என்று உறுதியாகக் கூறலாம். அதேநேரம், சந்திர பகவான் சுபக் கிரகமாகி, கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியானால் கேந்திராதிபத்ய தோஷத்திற்கு உள்ளாவார். 
உங்களுக்கு தேய்பிறை சந்திரனாக இருப்பதால் கேந்திராதிபத்ய தோஷமும் நீங்கி விடுகிறது. 
பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் யோக காரகரான (ஒரு கேந்திரம், ஒரு திரிகோண வீடுகளுக்கு அதிபதி) செவ்வாய் பகவான் அஷ்டம, ஆயுள், புதையல் ஸ்தானமான எட்டாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான மேஷ ராசியை அடைகிறார். 
ராசி சக்கரத்தில் பலம் குறைந்த கிரகம், நவாம்சத்தில் பலம் பெற்றிருந்தால் இழந்த பலத்தை மீட்டுக் கொண்டு விடுவார் என்பது விதி. 
ஐந்தாம் வீட்டின் சிறப்பம்சங்களான ஞாபக சக்தி, ஆன்மிகம், மந்திரங்கள், தெய்வீகம், தெய்வீக உணர்வு, பின்னால் நடக்கப் போவதை முன்னாலேயே அறியும் உள்ளுணர்வு ஆகியவைகள் சிறப்பாக அமையும். 
ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் புத பகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்
திரிகோண ராசியான தனுசு ராசியை அடைகிறார். 
ஒன்பதாம் வீடு தர்ம வீடு என்றாலும் மத பக்தி, தெய்வ பக்தி, நீதி வழி நிற்றல், சத்திய கோட்பாடு, நேர்மையில் நாட்டம், நேரான நடத்தை ஆகியவைகளையும் குறிக்கும். 
ஒன்பதாம் வீடு வலுத்திருந்தால் "வாழப் பிறந்தவர்' என்று கூறவேண்டும். 
குரு பகவானின் ஐந்தாம் பார்வை லக்னமாகிய உயிர் ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை தைரிய, முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீதும், அங்கமர்ந்திருக்கும் ராகு பகவானின் மீதும் படிகிறது. 
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கதிபதியான சூரிய பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்ற, சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) உச்சம் பெற்றமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். 
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர பகவான் லாப ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) ஆட்சி பெற்றமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். 
களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அஷ்டம ஸ்தானமானஎட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனி பகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் குரு பகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் நீச்சம் பெறுகிறார். 
ராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சனி பகவானின் சாரத்தில் (அனுஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். கேது பகவான் லாப ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். 
பொருளாதாரம் வளர்ச்சி அடைய 2, 9, 11 -ஆகிய தன ஸ்தானங்கள் வலுத்திருக்க வேண்டும். இவற்றுடன் மூன்று திரிகோணாதிபதிகளில் இரண்டு திரிகோணாதிபதிகளாவது வலுத்திருக்க வேண்டும். 
நான்கு கேந்திர வீடுகளில் 4, 10-ஆம் வீடுகள் சுப பலம் பெற்றிருக்க வேண்டும். அதோடு பித்ரு தோஷமிருந்தால் வளர்ச்சிக்குத் தடை உண்டாகும். 
கடன், வியாதி, வழக்குகளைக் குறிக்கும் ஆறாம் வீட்டுக்கதிபதி பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்றமர்ந்திருக்கிறார். ராசிக்கு நான்கில் சூரிய பகவானும், ஐந்தில் புத, சுக்கிர, கேது பகவான்களும், லாப ஸ்தானத்தில் ராகு பகவானும் இருப்பது சிறப்பாகும். 
தற்சமயம் சனி மஹாதசையில் சுயபுக்தி 10.03.2022 வரை நடக்கும். இது முடிந்தவுடன் வழக்கிலிருந்து நிரபராதி என்று விடுவிக்கப்படுவீர்கள். எண்ணெய், பூஜைப் பொருள்கள், உணவு சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்றது. பொங்கு சனி (இரண்டாம் சுற்று) காலமாக இருப்பதால் மேன்மையே உண்டாகும். 
பிரதி சனிக்கிழமைகளில் சனி பகவானையும், பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.