காக்கா கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்கள்! என்ன இப்படிச் சொல்லிவிட்டார்கள் என்று பதற வேண்டாம்!! இப்படிக் கூறியிருப்பது, பழைய இலக்கியப் பாடலொன்றில் ...
சைவர்களின் மேன்மையைக் கூறுவதற்காகத் தமிழில் விளையாடி இருக்கிறார் ஆசிரியர். தமிழும் சைவமும் தமிழரின் இரு கண்கள் என்றால் அது மிகையாகாது. இனி பாடலின் உட்பொருள் பார்ப்போம்.
காக்கை = கால் கை . உள்ளங்கையில் கால் அளவு.
கறி சமைத்து = காய்கறி சமைத்து. உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து.
கருவாடு மென்று = கரு வாடும் என்று. உடலின் கருவாகிய உயிர் வாடும் என்று
உண்பர் சைவர் = சைவர்கள் உண்பார்கள்.
பொருள்: உள்ள பொருளாகிய சிவமாய் சமையும் வாழ்நாள் நோக்கம் கொண்ட சைவர்கள், உடலில் உயிர் தங்க வேண்டும் என்பதற்காக, உள்ளங்கையில் கால் அளவு காய்கறி சமைத்து உண்பர். அதாவது சிவனை வழிபாடு செய்யும் சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் கால் வயிறு மட்டும் உண்பார்கள். இதுதான் அவர்களது அடிப்படை நியதி. அதனால்தான் சிவனடியார்கள் எப்போதும் ஒல்லியான தேகத்துடன் இருப்பார்கள் இப்படி இருந்தால்தான் முக்திக்கு வழிகாட்டியான தவம், யோகம் பயில முடியும்.
தொட்டுத் தொடர்வோம் ஈசனை... (திருமூலர் திருமந்திரம் )
விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியை
தொட்டுத்தொடர்வன் தொலையாப் பெருமையை
எட்டுமென் ஆருயிராய் நின்ற ஈசனை
மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே..
மேலான ஜோதி வடிவமாய் இருக்கும் சிவபெருமானை, நாம் ஏன் நினைப்பதும் மறப்பதுமாய் இருக்கிறோம்.
அவன் நினைவை உறுதியாகத் தொட்டுத் தொடர்ந்து அவனது முடிவில்லாத பெருமையை உணர்வோம்.
நம் ஆருயிராய் நிற்கும் அந்த ஈசனின் நினைவில் எப்போதும் கலந்திருப்பதே நாம் அவனுக்குச் செய்யும் திருமஞ்சனமாகும். (மேலான நீராடல் )
திருமூலர் கூற்றுப்படி ஈசனுக்குப் பலபட அபிஷேக ஆராதனை செய்து விட்டேன் என்று நில்லாமல் அவனை எப்போதும் மனதில் நிறுத்தி அவனோடு கலந்திருப்பதே அவனுக்குச் செய்யும் மேலான நீராடல் என பகர்கிறார்.
சிவனின் அருளைப் பெற்ற ராசிகள்
சிவனின் அருளைப் பெற்ற ராசிகளாக மேஷம், கும்பம், விருச்சிகம் மற்றும் மகரம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. இவற்றில், கும்ப ராசிக்கு சனி பகவான் அதிபதி, அவர் சிவபெருமானின் பக்தர் என்பதால் சிவன் அருள் அவர்களுக்குக் கிடைக்கும். விருச்சிக ராசிக்கு சிவபெருமானின் அருள் எப்போதும் இருக்கும். அதேபோன்று மேஷ ராசிக்கு சிவபெருமானின் அனுக்கிரகம் எப்போதும் இருக்கும். மகர ராசியினர் சிவபெருமானுக்குப் பிடித்த ராசிகளில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.
மேஷ ராசியில் செவ்வாய் ஆட்சி நடப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு சிவபெருமான் சிறப்பு அருள்கிறார். செவ்வாய்க் கிரகம் சிவபெருமானின் அங்கமாகக் கருதப்படுகிறது. இந்து புராணங்களின்படி, அந்தகாசுரன் என்ற அரக்கனுடன் போரிடும்போது, சிவபெருமானின் வியர்வைத் துளி தரையில் பட்டது. அப்போதுதான் செவ்வாய்க் கிரகம் தோன்றியது. எனவே, இந்த ராசிகள் சிவபெருமானின் குளிர்ந்த அருளைப் பெற்றவர்களாகின்றன. இவர்கள் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவார்கள்.
விருச்சிக ராசியின் அதிபதியும் செவ்வாய். இவர்கள் சிவபெருமானின் சிறப்பு அருளைப் பெறுவார்கள். திங்கள்கிழமை கோயில்களில் சிவபெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதில் கலந்து கொண்டால் வேலை மற்றும் வியாபாரத்தில் வெற்றி பெறுவது உறுதி. பொருளாதார ரீதியாகப் பலமாக இருப்பீர்கள். குடும்ப ஆதரவைப் பெறுவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள்.
மகர ராசிக்கு அதிபதி சனி பகவான். சனி பகவான் சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பக்தர்களில் ஒருவர். எனவே மகர ராசிக்காரர்கள் சனி பகவான் மற்றும் மகாதேவரிடம் சிறப்பான ஆசிகளைப் பெறுகிறார்கள். இவர்கள் வில்வ இலை, கங்கை நீர், பசுவின் பால் போன்றவற்றை வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும். இப்படிச் செய்வதால் இந்த ரசியினருக்கு சிவன் எந்த சிரமத்தையும் ஏற்படுத்தமாட்டார்.
கும்ப ராசியும் சனி பகவானால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் சிவன் மற்றும் சனி பகவானின் சிறப்பு ஆசிர்வாதங்களையும் பெறுகிறார்கள். தொழில் ரீதியாக வெற்றி பெறுவீர்கள். செல்வத்துடன் வருமானமும் பெருகும். அவர்கள் எதை நினைத்தாலும் அதை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள். உங்கள் இலக்கை அடைவீர்கள்.
சிவனின் ஆசிர்வாதம் பெறும் ஜோதிட அமைப்பு
ஒருவரின் ஜாதகத்தில் மாந்தி பகவான் லக்னத்தில் இருந்தாலோ, அல்லது லக்னாதிபதியுடன் தொடர்பு கொண்டிருந்தாலோ, அல்லது லக்னத்தில் இருந்து 2, 8, 11 ஆகிய பாவங்களில் இருந்தாலோ அவர்களுக்கு சிவபெருமானின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.
ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையே தவிர , முடிவு அல்ல என்பதனை உணரவும். அதே போல் ஜோதிடர் வழிகாட்டியே தவிர, கடவுள் அல்ல. பரிகாரம், என்பது ஜாதகர் மனமாற்றமும், கடவுளிடம் முழு சரணாகதியுமே ஆகும்.
தொடர்புக்கு : 98407 17857, 91502 75369
இதையும் படிக்க: நீரிழிவு நோய் யாரையெல்லாம் தாக்கும்? ஜாதகம் மூலம் அறிய முடியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.