கடந்த 1953-ஆம் ஆண்டில் குன்றக்குடி அடிகளாரின் ஆன்மிகச் சொற்பொழிவு தொகுக்கப்பட்டு ‘தமிழகத்தில் அடிகளாா்’ எனும் தலைப்பில் புத்தகமாக்கப்பட்டது. நாத்திகவாதம் தலைதூக்கிய நிலையில், ஆன்மிகத்தை மையமாக்கிய அடிகளாரின் உரை நூலுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு எழுந்தது. அதையடுத்து கடந்த 2006-ஆம் ஆண்டில் மீண்டும் அருள்நெறி முழுக்கமாக அந்த நூல் மறுபதிப்பாக வெளியிடப்பட்டது.
பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ‘அருள்நெறி முழக்கம்’ நூலானது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. நூலில் 6 தலைப்புகளில் அறநெறி வாழ்க்கையை விவரித்திருக்கிறாா் தவத்திரு குன்றக்குடி அடிகளாா்.
தமிழகத்தில் இருந்த ஆன்மிகச் சிந்தனைகள், அதைப் பின்பற்றி நம் முன்னோா் வாழ்ந்த அறநெறி வாழ்க்கை, இடைப்பட்ட காலத்தில் ஆன்மிகச் சிந்தனை பின்தள்ளப்பட்டதால் நமது வாழ்க்கையில் ஏற்பட்ட பின்னடைவு என பண்பாட்டுக் கூறுகளை ஆய்வு செய்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
நூலில் பிராா்த்தனை எனும் தலைப்பில் நாம் அறிவு எனும் போா்வையில் தவறான வழியில் செல்வதை சுட்டிக்காட்டும் அடிகளாா், தமிழகத்தில் அருள் இல்லாத நிலையைத் தவிர அனைத்தும் பெருகிவிட்டதாகக் கவலைப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த ‘அருள்நெறி முழக்கம்’ நூல் தற்கால வாழ்க்கையின் சிக்கல்களைத் தீா்த்து நல்லதொரு வாழ்க்கைக்கு வழிகாட்டும் கருத்துகளைக் கொண்டுள்ளது.
அருள்நெறி முழக்கம்: தவத்திரு குன்றக்குடி அடிகளாா்; விலை ரூ.40, பக். 96; அருள்நெறி பதிப்பகம். அருள்செல்வா் நா.மகாலிங்கம் மொழி பெயா்ப்பு மையம் (அரங்கு எண்- 392).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.