முகப்பு
செய்திகள்

சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி: திரையரங்குகளில் ஜனவரி 28-ல் வெளியீடு!

இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா போன்றோர் நடித்துள்ளார்கள்.

Updated On : 6 ஜனவரி 2021, 3:04 pm IST
பகிர்:

சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படம் ஜனவரி 28-ல் வெளியாகவுள்ளது.

கவலுதாரி என்கிற கன்னடப் படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. கபடதாரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசை - சைமன் கே கிங். தயாரிப்பாளர் - தனஞ்ஜெயன். தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் ஜனவரி 28-ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

மேலும், தைப்பூசத் திருநாளுக்கு நிகழாண்டு (ஜன. 28) முதல் பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதற்குப் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.