சினிமா

சமுத்திரக்கனி நடிக்கும் 'பெட்டிக்கடை இன்று விடுமுறை'

நெல்லைப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் படக்குழு பயணிக்கவுள்ளது. வரும் 19ல் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கவுள்ளார்கள்.

தினமணி

இன்று வாங்க நினைக்கிற பொருளை இருந்த இடத்திலிருந்து விரல்நுனி அசைவில் ஆன்லைனில் வாங்க முடிகிறது. ஒரு காலத்தில் கடைகளைப் பார்ப்பதே அரிது.

அந்தக் காலத்தில் இருபது ஊருக்கு ஒரு இடத்தில்தான் ஒரு பெட்டிக்கடையே இருக்கும். அது அன்று பிரபலமானதாக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அப்படி ஒரு பெட்டிக்கடையை மையப்படுத்தி சுழலும் கதைதான் 'பெட்டிக்கடை இன்று விடுமுறை'. இப்படத்தில் காதல், கலகலப்பு நகைச்சுவை எல்லாம் இருக்கும்.

நெல்லை வட்டாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை இது. புதுமுக இயக்குநர் இ கார்வண்ணன் இயக்குகிறார். லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார்.

"இது இன்றைய இளைஞர்களின் அப்பாக்களின் காதல் கதை என்று கூறலாம். அக்கால கட்டத்தின் அசல்தன்மையுடன் மண்ணின் மணம் மாறாத யதார்த்த பதிவாக இது இருக்கும். படத்தில் வரும் கில்லி விளையாட்டு இரண்டு ஊர்ப்பகை வருமளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது." என்கிறார் இயக்குநர்.

நாயகனாக 'மொசக்குட்டி' வீரா நடிக்க, நாயகி உள்பட பலரும் புதுமுகங்களே. முக்கிய வேடத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்க, ஆர்.சுந்தர் ராஜன், செந்தி ஆகியோரும் நடிக்கிறார்கள்.ஒளிப்பதிவு அருள். இசை மரிய மனோகர். பிரபல எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி வசனம் எழுதுகிறார்.

நெல்லைப் பகுதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரங்களில் படக்குழு பயணிக்கவுள்ளது. வரும் 19ல் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்கவுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அவசர நிலை திரும்பப் பெறப்பட்டது: அகமதாபாத் விமான நிலைய நிர்வாகம்

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிகர லாபம் 27% சரிவு!

வடகிழக்குப் பருவமழை: நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை இம்மாதமே பெறலாம்!

பிகார் தேர்தல்: 57 வேட்பாளர்களை அறிவித்தார் நிதீஷ் குமார்!

SCROLL FOR NEXT