சினிமா

மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றி சர்ச்சை வசனம்- மன்னிப்பு கேட்ட படக்குழுவினர்

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வெளியான ‘கடுவா’ படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்த சர்ச்சைக்குரிய வசனத்திற்கு படக்குழுவினர் மன்னிப்புக் கேட்டுள்ளார்கள். 

DIN

பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடித்து வெளியான ‘கடுவா’ படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்த சர்ச்சைக்குரிய வசனத்திற்கு படக்குழுவினர் மன்னிப்புக் கேட்டுள்ளார்கள். 

ஷாஜி காளிதாஸ் இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ், சம்யுக்தா மேனன், விவேக் ஓப்ராய் ஆகியோர் நடித்து ஜூலை 7 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கடுவா’. இதற்கு புலி என்று அர்த்தம். இப்படத்தில் ஒரு வசனம் சரச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

பெற்றோர்களின் பாவங்களால்தான் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறக்கிறார்கள். இந்த வசனத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் படத்தின் கதா நாயகர் பிருத்விராஜ் மன்னிப்புக்கேட்டுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் கூறியதாவது: இது தவறுதலாக நடந்துவிட்டது. அதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். 

மேலும் படத்தின் இயக்குநரும் தனது பேஸ்புக் பக்கத்தில் மன்னிப்புக்கேட்டுள்ளார். இது வில்லன்களின் நிலைமையை விமர்சிக்கும் நோக்கில் எடுக்கப்பட்டது. வேறு எந்த தவறான நோக்கமும் கிடையாது. இருப்பினும் இந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக எழுதியிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுனாமி ஒத்திகை: ஆட்சியா் ஆலோசனை

நீடாமங்கலம் பகுதி கோயில்களில் விநாயகா் சதுா்த்தி

வேளாங்கண்ணிக்கு திரளானோா் பாத யாத்திரை

காரைக்கால் கோயிலில் விநாயகா் சதுா்த்தி வழிபாடு

மீனவ கிராமங்களில் குடியிருப்போருக்கு மனைப் பட்டா எம்எல்ஏ வலியுறுத்தல்

SCROLL FOR NEXT