முகப்பு
சினிமா

சற்றுநேரத்தில் ‘கோட்’ அப்டேட்!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோட் அப்டேட் வெளியாகிறது.

Updated On : 11 ஏப்ரல், 2024 at 6:37 AM
பகிர்:

விஜய் நடிக்கும் கோட் பட அப்டேட்டை இன்று வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு, கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ் (G.O.A.T. - Greatest Of All Times) எனப் பெயரிட்ட அறிவிப்பு போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுச்சேரி, கேரளத்தில் படத்தின் படப்பிடிப்பு நிகழ்ந்தபோது தன் ரசிகர்களை விஜய் சந்தித்து எடுத்துக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலானது.

இதற்கிடையே நடிகர்கள் பிரபுதேவா மற்றும் பிரசாந்த் ஆகியோரின் பிறந்தநாளில் புதிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு இன்று பிற்பகல் 1.05 மணிக்கு கோட் படத்தின் புதிய அப்டேட்டை படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதிய அப்டேட் முதல் பாடலுக்கானதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.