சினிமா

தக் லைஃப்: மீண்டும் இணைந்த துல்கர்; இரட்டை வேடத்தில் சிம்பு?

தக் லைஃப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க நடிகர் சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் மீண்டும் இணைந்துள்ளதாகவும், சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் 1987ல் வெளியான 'நாயகன்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.

தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைபெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், த்ரிஷா நடித்த கிளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே துல்கர் சல்மான் தனது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதால், அதிக நாள்கள் தக் லைஃப் படத்துக்கு தர முடியாத காரணத்தால் விலகியதாக தகவல்கள் வெளியாகின.

துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், துல்கர் சல்மான் தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.

இந்த நிலையில், நடிகர் சிம்பு புதிய கதாபாத்திரத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தில்லியில் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 20-ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், கெளதம் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் மீராபாய் சானு!

ஆம்புலன்ஸ் ஊழியர்களை தாக்கினால் 10 ஆண்டுகள் சிறை! செய்திகள்:சில வரிகளில் | 25.8.25 | MKStalin

உடல்நலம் குன்றியவரைத் தொட்டில் கட்டி 8 கி.மீ. தூக்கிவந்த மலைவாழ் மக்கள்! விடியோ காட்சி!

தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு: சுவரை உடைத்து தொழிலாளர்களை மீட்ட தீயணைப்புப் படை!

யோலோ படத்தின் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT