சினிமா

ஜெயிலர்-2 முதல் டீசர்..! ஆக்‌ஷனில் மிரட்டும் ரஜினி!

ஜெயிலர்-2 முதல் டீசர் இன்று மாலை வெளியானது.

DIN

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் ’ஜெயிலர்-2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று(ஜன. 14) மாலை வெளியிடப்பட்டுள்ளது.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர்-2 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஜெயிலர் திரைப்படத்தில் காண்பிக்கப்பட்ட ரஜினி குடும்பத்தின் வீடு இன்று வெளியாகியுள்ள டீசர் விடியோவில் வருகிறது.

அந்த வீட்டிலிருக்கும் இசையமைப்பாளர் அனிருத்தும், இயக்குநர் நெல்சனும் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்க்கின்றனர். அங்கே ரஜினி தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக கண் கண்ணாடியை பிடித்தபடி நடைபோட பின்புறத்தில் ஒரு கட்டடம் வெடித்துச் சிதறுகிறது. அதனைத்தொடர்ந்து, ஜெயிலர்-2 பெயர் வருகிறது.

ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக அப்படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ஏரியில் மூழ்கிய தொழிலாளியை தேடும் பணி தீவிரம்

சாலையில் கிடந்த கைப்பேசியை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்!

தேசிய மோட்டாா் பைக் பந்தயம்: சா்தக், ஜகதீஸ்வரி சிறப்பிடம்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு!

SCROLL FOR NEXT