சிவகார்த்திகேயன் முதன்மைக் கதாபாத்திரமேற்று நடித்துள்ள பராசக்தி திரைப்படத்திலிருந்து புது போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று(அக். 6) வெளியிட்டுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் முதல்முறையாக சிவகார்த்திகேயனும் ரவி மோகனும் இணைந்து நடிப்பதால் பராசக்தி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகுதியாக உள்ளது.
இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார். அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜன. 14, 2026-இல் இப்படம் திரைக்கு வருகிறது.
படம் வெளியாக இன்னும் 100 நாள்களே உள்ள நிலையில், பராசக்தி திரைப்படத்திலிருந்து புது போஸ்டர் ஒன்றை படக்குழு இன்று(அக். 6) வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.