முகப்பு
செய்திகள்

ஆர்யாவின் 'கடம்பன்' :  பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு!

நடிகர் ஆர்யாவின் புதிய படமான 'கடம்பன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் இன்று மாலை  வெளியிடப்பட்டுள்ளது. 

Updated On : 31 அக்டோபர், 2016 at 6:11 PM
பகிர்:

சென்னை: நடிகர் ஆர்யாவின் புதிய படமான 'கடம்பன்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் இன்று மாலை  வெளியிடப்பட்டுள்ளது. 

‘மஞ்சப்பை' திரைப்பட இயக்குனர் ராகவன் இயக்கத்தில் நடிகர் ஆர்யா ‘கடம்பன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்யா மலைவாழ் இளைஞனாக நடிக்கிறார். இதற்காக தனது உடல் எடையை அதிகரித்து நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடிக்கிறார். இந்தப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்  இன்று மாலை வெளியிடப்பட்டது. அதனது தொடர்ந்து படத்தின் டீசரும் வெளியிடப்பட உள்ளது.

Advertisement

மாலை  5 மணிக்கு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் போஸ்டரை நடிகர் கார்த்தி வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து 5.30 மணிக்கு மற்றொரு போஸ்டரை விஷால் வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக  இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடவிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.