செய்திகள்

பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறேன்: கமல் பேட்டி

சினிமாவில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராகப் பணியாற்றியதில்லை.

எழில்

விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களை முடித்துவிட்டு மருதநாயகம் படத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று கமல் அடுத்தடுத்து முக்கியமான வேலைகளைக் கையில் வைத்துள்ளார். இதற்கிடையே பிக் பாஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் என்கிற தகவல் அந்நிகழ்ச்சி மீது புதிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியதாவது: 

ஆமாம். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குகிறேன். சினிமாவில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நான் பணியாற்றியதில்லை. அது எப்படி அமையப்போகிறது என்று பார்க்கப்போகிறேன். 

நேரம் ஒரு பிரச்னைதான். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 8 மாதங்களாக நான் சரியான உடற்தகுதியில் இல்லை. தற்போது விஸ்வரூபம் 2, சபாஷ் நாயுடு படங்களை முடிக்க உள்ளேன். இதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளேன். பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியை சல்மான் அருமையாக செய்துள்ளார். 

இத்தனை ஆண்டு கால அனுபவத்தில் என்னால் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு அறிவுரை சொல்ல முடியும் என எண்ணுகிறேன். எப்படிப் போகிறது என்று பார்க்கலாம். புதிய பாதையில் பயணிப்பது என்பது எப்போதும் சுவாரசியமான விஷயம் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவின் 126% வரி எதிரொலி! சூரிய சக்தி பங்குகள் 14% சரிவு!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை முடக்கியது திமுக: கே. அண்ணாமலை குற்றச்சாட்டு

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெய்ட் அண்ட் ஸீ’ நிலைமை எதுவும் இல்லை: தமிழிசை

SCROLL FOR NEXT