செய்திகள்

பிரபாஸின் சாஹூ திரைப்பட ஹீரோயின் இவர் தானாம்?!

ஆஷிக் 2 திரைப்படப் புகழ் ஷ்ரத்தா கபூர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய அத்தையின் பெயர் என்ன தெரியுமா? பத்மினி கோலாப்புரி

சரோஜினி

பிரபாஸ் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் சாஹூ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. கதை நிகழ்வது பெரும்பாலும் வளைகுடா நாடுகளில்  என்பதால் பஹ்ரைன், துபாய் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து அதில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நடிகை குறித்த யூகங்கள் டோலிவுட்டில் றெக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தன. முதலில் அனுஷ்கா ஷெட்டி என்றார்கள், பின்னர் காத்ரினா கைஃப் என்றார்கள்.

அலியா பட், பரினிதி சோப்ராவின் பெயர்கள் கூட அடிபட்டன. சிலர்  ஷ்ரத்தா கபூர் என்று கூட சொன்னார்கள். முதலில் இதை மறுத்தார் ஷ்ரத்தா கபூர். அவருடைய பாலிவுட் வாய்ப்புகளை விட்டுக் கொடுத்து விட்டு இதில் நடிக்க அவருக்குப் போதுமான தேதிகள் இல்லாமலிருந்த காரணத்தால் ஷ்ரத்தா முதலில் இந்த வாய்ப்பை மறுத்தது உண்மை தான். ஆனால் இப்போது சாஹூவின் நாயகியாக மீண்டும் ஷ்ரத்தா கபூரின் பெயர் தான் அடிபடுகிறது. அவர் தான் சாஹூவில் பாகுபலியின் ஜோடி. அது மட்டுமல்ல டோலிவுட்டில் இது ஷ்ரத்தா கபூரின் முதல் எண்ட்ரியும் கூட!

ஆஷிக் 2 திரைப்படப் புகழ் ஷ்ரத்தா கபூர் பிரபல பாலிவுட் வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய அத்தையின் பெயர் என்ன தெரியுமா? பத்மினி கோலாப்புரி. மறுமகளைப் போலவே அத்தைக்கும் அந்தக் காலத்தில் மொழி பேதமின்றி நிறைய ரசிகர்கள் இருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்எஸ்சி தோ்வா்கள் மீது பலப் பிரயோகம்: போலீஸாா் மீது அரசியல் கட்சிகள் கண்டனம்

'ஜாதி மறுப்பு திருமணம்: மாா்க்சிஸ்ட் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்’

செல்லப்பிராணிகள் விற்பனை- இனப்பெருக்க நிறுவனங்கள் பதிவு செய்ய அரசு காலக்கெடு!

போலி வாரிசு சான்றிதழ் விவகாரம்: போனி கபூா் தொடுத்த வழக்கில் தாம்பரம் வட்டாட்சியருக்கு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சிறப்பு உதவி ஆய்வாளருக்கு 3 மாதம் சிறை

SCROLL FOR NEXT