செய்திகள்

தரமணி பட விளம்பரத்தில் நாட்டு நடப்பைச் சொல்வது ஏன்?

DIN

தங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் - தரமணி. வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

தணிக்கையில் ஏ சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 11 அன்று வெளிவருகிறது. இதையொட்டி இப்படம் குறித்த விளம்பரங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. விளம்பர வாசகங்கள் சுவாரசியமாக மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரியதாகவும் உள்ளன.

முதலில் வெளியிட்ட போஸ்டரில், தணிக்கைக் குழுவின் கூற்றுப்படி ஆண் 'ரா'வாக மது அருந்தினால் யூ/ஏ. பெண் 'ரா'வாக மது அருந்தினால் ஏ. ஆக தரமணி ஏ என்று அதில் எழுதப்பட்டிருந்தது. பிறகு வெளியிடப்பட்ட போஸ்டரில், ரொம்ப பேசாத, இப்பல்லாம் பேசுனாலே குண்டாஸ்ல கைது பண்றாங்க. பார்த்துக்கோ... என்று சர்ச்சைக்குரிய வாசகம் இடம்பெற்றுள்ளது.

சமீபத்திய போஸ்டர்களில் சமகால அரசியல் குறித்த விமரிசனங்கள் மேலும் தென்படுகின்றன. 'எங்க பீச்சுக்கா... கருப்பு வண்டி... கருப்பு ஹெல்மட்டு... நான் வேற கருப்புச் சட்டை... போராடப் போறோம்னு புடுச்சுட்டுப் போய்டுவாங்க...' என்றும் இன்னொரு போஸ்டரில், 'தம்பி, நீ எவ்வளவு 'நீட்'டி 'நீட்'டிக் கேட்டாலும் இனிமே டாக்டர் ஆகறதெலாம் ரொம்பக் கஷ்டம்' என்றும் எழுதி கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் விமரிசனங்களும் எழுந்துள்ளன. திரைப்பட போஸ்டரில் நாட்டு நடப்பு விஷயங்களைத் தேவையின்றிச் சொல்வது ஏன் என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதற்கும் போஸ்டர் வழியாக பதில் அளித்துள்ளார் ராம்.

திரையரங்குகளில் அரசு விளம்பரங்கள் திரையிடப்படும்போது, திரைப்பட விளம்பரங்களில் நாட்டு நடப்புகளைச் சொல்லலாம்தான். வாழ்க ஜனநாயகம் என்று சமீபத்திய போஸ்டரில் விமரிசனங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT