முகப்பு
செய்திகள்

சதுரங்க வேட்டை 2: டீசர் வெளியீடு!

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

2014-ல், மனோபாலா பிக்சர் ஹவுஸ் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் நட்ராஜ் நடித்து வெளியானது சதுரங்கவேட்டை படம். வித்தியாசமான கதையால் ரசிகர்களிடம் அதிக கவனத்தைப் பெற்றது. 

தென்மாவட்டங்களில் நடைபெறும் ஏமாற்று வேலைகளைப் பற்றி விவரித்தது அந்தப் படம். இப்போது இதன் அடுத்தப் பாகம் தயாராகவுள்ளது. தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நகரவாழ் மக்களை தங்களது சிலந்தி வலையில் சிக்கவைத்து எவ்வாறெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்கிற கதையுடன் சதுரங்கவேட்டை 2 படம் உருவாக்கப்பட்டுள்ளது. மனோபாலாவின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் இப்படத்தையும் தயாரிக்கிறது. இதில் அரவிந்த்சாமியும் த்ரிஷாவும் நடித்துள்ளார்கள். 

முதல்முறையாக அரவிந்த் சாமியும் த்ரிஷாவும் ஜோடி சேர்வதாலும் சதுரங்கவேட்டையின் இரண்டாம் பாகம் என்பதாலும் இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.