செய்திகள்

வேலைக்காரன் படத்துக்கு முழுப்பக்க விளம்பரம்: அபராதம் விதித்தது தயாரிப்பாளர் சங்கம்!

நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்குச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்...

எழில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் வேலைக்காரன் படத்தின் டீசர் ஆகஸ்ட் 14 அன்று வெளியிடப்பட்டது. அதையொட்டி அன்றைய நாளிதழ்களில் இப்படத்தின் விளம்பரம் முழுப்பக்க அளவில் வெளியிடப்பட்டது. 

நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்குச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். அதில் முக்கியமான விதிமுறை. எந்தப் படத்துக்கும் நாளிதழ்களில் முழுப்பக்கம் விளம்பரம் கொடுக்கக்கூடாது. எந்தப் படமாக இருந்தாலும் கால் பக்கத்துக்கு மேல் விளம்பரம் இருக்கக்கூடாது. 

இந்த விதிமுறையை மீறி முழுப்பக்கம் விளம்பரம் அளித்ததால் வேலைக்காரன் படத் தயாரிப்பாளருக்கு அபராதம் விதித்துள்ளது தயாரிப்பாளர் சங்கம். நாளிதழ்களில் விளம்பரம் அளித்த விஜய் டிவி மற்றும் தயாரிப்பு நிறுவனமான 24 ஏஎம் ஸ்டூடியோஸ் ஆகிய இரு நிறுவனங்களும் ஒரு கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைக்கு இன்று இடைவேளை! நாளை மீண்டும் தொடங்கும்!

சவரனுக்கு ரூ.800 உயர்ந்த தங்கம் விலை!

வங்கிக் கணக்கு தொடங்கினால் பணம் கிடைக்குமா? கல்லூரி மாணவர்கள் கவனத்துக்கு!

டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கால்பந்து வரலாற்றில் முதல்முறை... குராசோ தீவு உலக சாதனை!

SCROLL FOR NEXT