முகப்பு
செய்திகள்

வட அமெரிக்காவில் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கவுள்ள பவன் கல்யாண் படம்!

வட அமெரிக்காவில் 500 திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. ஓர் இந்தியப் படம் இத்தனை திரையரங்குகளில்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:19 PM
பகிர்:

திரிவிக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள படம் - அஞ்ஞாதவாசி (AgnathaVaasi). இது பவன் கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் போன்றோரும் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் ஜனவரி 10-ம் தேதி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, கனடா பகுதிகளை உள்ளடக்கிய வட அமெரிக்காவில் 500 திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. ஓர் இந்தியப் படம் இத்தனை திரையரங்குகளில் வெளியாவது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு பாகுபலியின் அனைத்துப் பதிப்புகளும் 462 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்தன. அதை அஞ்ஞாதவாசி முறியடிக்கவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.