முகப்பு
செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் இசையமத்துள்ள மெர்சல் பாடல்கள்: ஆகஸ்ட் 20-ல் வெளியீடு!

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள மெர்சல் படப் பாடல்கள் ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என...

Updated On : 22 ஜூலை, 2017 at 12:22 PM
பகிர்:

தெறி படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி கூட்டணி மீண்டும் இணையும் படம் - மெர்சல். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, கோவை சரளா, சத்யன், யோகி பாபு எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் பங்கேற்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் 100-வது படம் இது. ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிவரும் படம், தீபாவளியன்று வெளிவருகிறது.

இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள மெர்சல் படப் பாடல்கள் ஆகஸ்ட் 20 அன்று வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.