ரஜினியின் அரசியல் பிரவேசம்: ஆர்வத்துடன் காத்திருப்பதாக தனுஷ் பேட்டி
எனக்கு அரசியல் தெரியாது. எனவே அதைப் பற்றி பேச விரும்பவில்லை...
தாணு மற்றும் தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். தனுஷ், அமலா பால், கஜோல் போன்றோர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் ஜூலை 28-ம் தேதி வெளியாகவிருந்தது. இந்நிலையில் திடீரென இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. விவேகம் படம் வெளியான இரு வாரங்கள் கழித்து வேலையில்லா பட்டதாரி 2 படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் தனுஷ், கஜோல், செளந்தர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது தனுஷ் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறியதாவது
Advertisement
எனக்கு அரசியல் தெரியாது. எனவே அதைப் பற்றி பேச விரும்பவில்லை. ரஜினி சாரின் மனத்தில் என்ன உள்ளது என்று தெரியவில்லை. அனைவரையும் போல நானும் அவருடைய அரசியல் நுழைவை எதிர்பார்க்கிறேன் என்றார்.