ஜூன் 23 அன்று வெளியாகும் ஜெயம் ரவி நடித்த வனமகன்!
பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி.
பேராண்மை படத்துக்குப் பிறகு மீண்டும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞனாக வனமகன் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இவர் ஜோடியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். விஜய் தயாரித்து இயக்கும் வனமகன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் 50-வது படம். இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், வனமகன் படம் மே 12 அன்று முதலில் வெளிவருவதாக இருந்தது. பிறகு மே 19 அன்று வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. பிறகு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் வனமகன் படம் ஜூன் 23-ம் தேதி வெளியாகவுள்ளது.
Advertisement