செய்திகள்

‘ஜெயம்’ திரைப்பட வில்லன் நடிகர் கோபிசந்தின் புது அவதாரம்...

படத்தின் டீஸரைப் பார்த்தால் ‘பணம்’ எனும் பிரதான விசயத்தை மையமாக வைத்து சுழலும் ஆக்‌ஷன் த்ரில்லர் வகைப் படமாகத் தோன்றுகிறது. படம் ஹிட் அடித்தால் விரைவில் தமிழுக்கும் வரலாம்.

சரோஜினி

தெலுங்கில் தற்போது நாயகனாக வலம் வந்தாலும், தமிழ் ரசிகர்களுக்கு ‘ஜெயம்’ படத்தின் மூலம் வில்லனாகத் தான் இவர் அறிமுகமானார். தெலுங்கில் ‘வர்ஷம்’ என்ற பெயரிலும், தமிழில் ‘மழை’ என்ற பெயரிலும் முறையே த்ரிஷாவும், ஸ்ரேயாவும் நடித்த படங்களில் தெலுங்கில் மெகா ஹிட்டடித்த வில்லன் கோபிசந்த். தமிழில் அவரது வேடத்தில் ‘சாம்ராட் அசோகா’ புகழ் ‘ராகுல் தேவ்’ நடித்திருப்பார். 

கோபிசந்த் தற்போது தெலுங்கில் கதாநாயகனாக நடித்து வருகிறார். நாயகனாக அவரது நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் கெளதம் நந்தா, இத்திரைப்படத்துக்காக கோபிசந்த் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல் கெட் அப் எல்லாம் மாற்றி நடித்திருக்கிறாராம். அப்படத்தின் டீஸர் அவரது பிறந்த நாளான இன்று ஜூன் 22 ல் வெளியாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் கோபிசந்துக்கு ஹன்ஷிகா, கேதரின் தெரேஸா என இரு நாயகிகள். இருவரில் கேதரின் பகட்டான பெண்ணாகவும், ஹன்ஷிகா எளிமையானவராகவும் படத்தில் தோன்றுவார்களாம். 

கெளதம் நந்தா டீஸர்...

படத்தின் டீஸரைப் பார்த்தால் ‘பணம்’ எனும் பிரதான விசயத்தை மையமாக வைத்து சுழலும் ஆக்‌ஷன் த்ரில்லர் வகைப் படமாகத் தோன்றுகிறது. படம் ஹிட் அடித்தால் விரைவில் தமிழுக்கும் வரலாம். பாகுபலி வெற்றியைத் தொடர்ந்து தற்போது பல தெலுங்குத் திரைப்படங்கள், அவை வெளி வந்த சூட்டில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்படுவதால் இந்தப் படமும் தமிழ் காணலாம். நாயகிகள் இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பியூன் வேலை: பிஎச்டி, எம்பிஏ உள்பட 24.76 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பம்!

கோவை: கிணத்தைக் காணோம் வடிவேலு காமெடி பாணியில் இல்லாத வீட்டுக்கு வரி!

துல்கர் சல்மான் - 41 படத்தின் படப்பிடிப்பு துவக்கம்!

தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!

வரம் நீ... அர்ச்சனா கௌதம்

SCROLL FOR NEXT