செய்திகள்

ஆதார் அட்டையில் பாகுபலிக்கே இந்த கதியா?

சரோஜினி

நம் நாட்டில் எதில் சமத்துவம் நிலவுகிறதோ இல்லையோ? இந்த ஆதார் கார்டு, ஓட்டர் ஐ.டி, புகைப்படங்களைப் பதிவு செய்யும் விசயத்தில் மட்டும் பரம சமத்துவம் நிலவுகிறது என்பதை அனைவரும் பூரணமாக நம்பலாம். இந்தப் புகைப்பட விசயத்தில் மட்டும் எவருடைய ஆணைகளும், அதிகாரங்களும், உலகளாவிய செல்வாக்குகளும் அட்சர சுத்தம் பயன்படுத்தப் படுவதே இல்லை. நாம் இந்த இந்தியப் பெருநாட்டின் பிரஜைகள் என்பதை ஊர்ஜிதப் படுத்துவதற்கு உண்டான அடையாளங்கள் கொண்ட, இந்த அட்டைகளை அதற்கு உரியவர்களைத் தவிர வேறு யாராலும் சட்டென அடையாளம் காண முடியாது என்பது தான் அதன் தனிச் சிறப்பு.

இது ஏதோ சாமானிய மனிதர்களான நமக்கு மட்டுமே இந்தக் கதி என்று எண்ணி விட வேண்டாம், இதோ இந்த ஆதார் கார்டைப் பாருங்கள்... பாகுபலி பிரபாஸின் ஆதார் அட்டை இது. அவருக்கே இது தன்னுடைய புகைப்படம் தான் என்று அடையாளம் காண முடிந்தால் அது அவருடைய அதிர்ஷ்டமே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT