செய்திகள்

‘தவமாய் தவமிருந்து’ பத்மப்ரியாவை மறந்துட்டீங்களா?!

இயக்குனர் சாமியின் ‘மிருகம்’, வசந்தின் ‘சத்தம் போடாதே’, விஷ்ணு வர்த்தனின் ‘பட்டியல்’ ப்ரித்வி ராஜின் ‘உருமி’ பழசி ராஜா உள்ளிட்ட குறிப்பிடத் தக்க சில படங்களில் நடித்து விட்டு சில வருடங்களாக கோலிவுட்

சரோஜினி

சேரனின் ‘தவமாய் தவமிருந்து’ அறிமுக நாயகியான பத்மப்ரியாவை மறந்து விட்டீர்களா? எம்.பி.ஏ பட்டதாரியான நடிகை பத்மப்ரியா, இயக்குனர் சாமியின் ‘மிருகம்’, வசந்தின் ‘சத்தம் போடாதே’, விஷ்ணு வர்த்தனின் ‘பட்டியல்’ ப்ரித்வி ராஜின் ‘உருமி’ பழசி ராஜா உள்ளிட்ட குறிப்பிடத் தக்க சில படங்களில் நடித்து விட்டு சில வருடங்களாக கோலிவுட்டிலிருந்து காணாமலே போய் விட்டார். பாலிவுட் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், மலையாளத்தில் மட்டும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார் என்று காற்று வாக்கில் ஒரு செய்திகள் வந்து கொண்டிருந்தன.

தற்போது மலையாளம் தவிர தெலுங்கிலும் நடித்துக் கொண்டிருக்கிறாராம் பத்மப்ரியா. ஜெகபதி பாபுவின் வெளிவரவிருக்கும் புதிய திரைப்படமான ‘படேல் S.I.R' ஆக்‌ஷன் த்ரில்லரில் பத்மப்ரியா தான் நாயகி. சால்ட் & பெப்பர் லுக்கில் கிண்ணென்று உடற் தசைகள் இழுபட முஷ்டி முறுக்கி வித்யாசமான தோற்றமளிக்கும் ஜெகபதி பாபுவைப் பார்க்கும் போதே இது எத்தகைய ஆக்‌ஷன் படம் என்று தெரிகிறது. ஆனால் திறமையாக நடிக்கத் தெரிந்த சில நாயகிகளில் ஒருவரான பத்மப்ரியாவுக்கு ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படத்தில் என்ன வேலை இருக்கும் என்று தான் தெரியவில்லை! 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT