செய்திகள்

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தில் விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்கள்!

DIN

வித்தியாசமான கதை  மற்றும் கதாபாத்திரங்கள் தேர்விற்கு பேர் போனவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் அடுத்த படமான 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' இவருடைய பெயர் சொல்லும் ஒரு வித்தியாசமான படமாகும் . இது சாகசம் மற்றும் காமெடி படமாகும். இதில் இதுவரை யாருமே செய்திராத, ஒரு சுவாரஸ்யமான பழங்குடி இன தலைவராக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த கதாபாத்திரத்திற்க்காக 8 வெவ்வேறு தோற்றங்களில் தோன்றவிருக்கிறார். இவரது நடிப்புத் திறனையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியந்ததாக கூறுகிறார் இப்படத்தின் இயக்குனர்  ஆறுமுக குமார் . 

'8 வெவ்வேறு தோற்றங்களில் விஜய் சேதுபதி இக்கதையில் கலக்கியுள்ளார். இப்படத்தின் இயக்குனராக மட்டும் இன்றி அவரது தீவிர ரசிகராகவும் அவரது நடிப்பை மிகவும் ரசித்தேன். இப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் மிகவும் சுவாரசியமானது மட்டுமின்றி  மிகவும் சவாலானதும் கூட.  இச்சவாலை அவர் மிகச் சுலபமாகவும் புத்திசாலித்தனமாகவும் கையாண்டதைக் கண்டு ஆச்சரியப்பட்டு  வியந்தேன் . 

'ஒரு நல்ல நாள்  பாத்து சொல்றேன்' மிகச் சிறப்பாக வந்துள்ளது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. விஜய் சேதுபதியின் 8 வெவ்வேறு தோற்றங்களும் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும்  கவரும். இப்படத்தின் இன்னொரு கதாநாயகனான கவுதம் கார்த்திக் சமீபத்தில் சுவைத்த தரமான வெற்றி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது . அவர் மேலும் பல உயரங்களை தொடுவர் . தமிழ் சினிமா ரசிகர்களில் ரசனையை மனதில் வைத்து கொண்டே ''ஒரு நல்ல நாள்  பாத்து சொல்றேன் '' படமாக்கி உள்ளோம்'  என தன்னம்பிக்கையுடன் கூறி விடைபெற்றார் இயக்குனர் திரு. ஆறுமுக குமார் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT