முகப்பு
செய்திகள்

கிரேசி மோகன் வசனம் எழுதும் சார்லி சாப்ளின் 2 படத்தில் பிரபுதேவா!

2002-ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கவுள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தேவி படத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார் பிரபுதேவா. தற்போது, சார்லி சாப்ளின் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மெர்குரி, யங் மங் சங், குலேபகாவளி, கொலையுதிர் காலம் படத்தின் ஹிந்தி ரீமேக்கான காமோஷி, இயக்குநர் விஜய்யின் அடுத்தப் படம் என வரிசையாக நடிப்பில் கவனம் செலுத்தி பல படங்களில் நடித்துவருகிறார் பிரபுதேவா.

2002-ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் சக்தி சிதம்பரம் இயக்கவுள்ளார். கிரேசி மோகன் வசனம் எழுதும் இப்படத்தில் நடிக்க பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். நிக்கி கல்ராணி, தன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.