முகப்பு
செய்திகள்

பிறந்தநாள் வாழ்த்து சொன்ன யோகி பாபுவுக்கு ஷாருக்கான் பதில்!

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் உங்களுடன் பணிபுரிந்தேன். மிகவும் பண்பான, நல்ல மனிதர் என்று வாழ்த்து தெரிவித்தார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ளார் யோகி பாபு.

தமிழில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ள யோகி பாபு, சமீபத்தில் ஷாருக்கானுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறினார். பிறந்தநாள் வாழ்த்துகள் சார். சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் உங்களுடன் பணிபுரிந்தேன். மிகவும் பண்பான, நல்ல மனிதர் என்று வாழ்த்து தெரிவித்தார் யோகி பாபு. 

அதற்குப் பதிலளித்த ஷாருக்கான், நன்றி. அது ஒரு ஜாலியான படம் என்று கூறியுள்ளார். இதை மகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் யோகி பாபு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.