முகப்பு
செய்திகள்

பாகுபலிக்குப் பிறகு அனுஷ்கா நடிக்கும் படம் - பாகமதி!

அனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி அவருடைய அடுத்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸ் சாஹு படத்தில் நடித்துவருகிறார். ஆனால் அனுஷ்கா பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்தன.

இந்நிலையில், அனுஷ்காவின் பிறந்தநாளையொட்டி அவருடைய அடுத்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. பாகமதி - அனுஷ்கா சத்தமில்லாமல் நடித்துவரும் படம். இதன் முதல் தோற்றம் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் பாகமதி படத்தை அசோக் இயக்கி வருகிறார். இசை - தமன். கடைசிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.