முகப்பு
செய்திகள்

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்: கமல் பேச்சு

தனது பிறந்தநாளையொட்டி, மையம் விசில் (Miamwhistle) என்கிற நற்பணி மன்ற செயலியை கமல் அறிமுகப்படுத்தியுள்ளார்...

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

அரசியல் கட்சியின் பெயரை இப்போது அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என கமல் கூறியுள்ளார்.

தனது பிறந்தநாளையொட்டி, மையம் விசில் (Miamwhistle) என்கிற நற்பணி மன்ற செயலியை கமல் அறிமுகப்படுத்தியுள்ளார்.

செயலி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் கமல் பேசியதாவது:

நான் வெளியிட்டிருப்பது செயலி மட்டுமல்ல. ஒரு பொது அரங்கமும் கூட. 

நல்லது செய்வதையும் பண்பறிந்து செய்ய வேண்டும். நல்லதைச் சரியான மக்களுக்குச் செய்யவேண்டும். அதுதான் அரசியல். தவறான ஆள்களிடம் தானத்தைக் கொடுப்பதும் தவறுதான். 

மக்கள் பிரச்னைகளை அறிந்துகொள்வதற்காகத் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளேன். நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது எனது கனவு. தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் பழுதடைந்துள்ளதாக நினைக்கிறேன். சக்கரங்களில் மைக்குப் பதிலாக மண் ஒட்டியுள்ளது. அக்கிரமங்களுக்கு எதிரான குரல் குறைந்துவிட்டதாக எண்ணுகிறேன். மக்கள் பிரச்னைகளைப் பேச மையம் விசில் என்கிற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளேன். 

கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பு அடித்தளம் சரியாக இருக்கவேண்டும். முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டியுள்ளது. சினிமா எடுப்பதற்கே 6 மாத முன்னேற்பாடுகளைச் செய்பவன் நான். அரசியல் அதைவிடவும் பெரிய பணி. அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கிவிட்டேன். கட்சியின் பெயரை இப்போது அறிவிக்கவேண்டிய அவசியமில்லை. நான் பிறந்ததற்கான காரணத்தை நிரூபிக்கும் தருணம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.