செய்திகள்

டிரம்ப் மகளுக்கு சமந்தா அளிக்கப் போகும் பரிசு என்ன தெரியுமா?

சரோஜினி

ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் உலகத் தொழில் முனைவோர் மாநாடு - 2017 ல் பங்கேற்பதற்காக இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப். அதற்காக 28 ஆம் தேதி தெலுங்கானா வரும் இவாங்காவுடன் பிரதமர் மோடியும் இணைந்து அவ்விழாவில் பங்கேற்கவிருக்கிறார். நவம்பர் 28 ஆம் தேதி நிகழ்வில் கலந்து கொண்டு மறுநாளான 29 ஆம் நாள் இவாங்கா நாடு திரும்புகிறார் என வெள்ளை மாளிகை செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

தெலுங்கானாவுக்கு முதன்முறையாக வருகை தரும் அமெரிக்க அதிபர் மகளுக்கு தெலுங்கானா அரசு சிறப்புப் பரிசுகள் மற்றும் சில அன்பளிப்புகள் தந்து அசத்த உள்ளதாம். அவற்றுள் முக்கியமானது தெலுங்கானாவின் பிரசித்தி பெற்ற கைத்தறிப் புடவைகள். தற்போது தெலுங்கானா அரசின் அதிகாரபூர்வ கைத்தறிச் சேலைகளுக்காக பிராண்ட் அம்பாஸிடராக இருப்பது நடிகை சமந்தா. இந்தியக் கைத்தறி ஆடைகளுக்கான குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் தெலுங்கானாவில் தயாராகும் பாரம்பரிய கைத்தறிப் புடவைகளின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு நடிகை சமந்தா கைத்தறிச் சேலைகளுக்கான சிறப்பு விளம்பரங்களில் தோன்றி அந்தப் புடவைகளின் விற்பனையை அதிகரிக்க முயற்சி எடுத்து வருவது அனைவரும் அறிந்ததே!

அந்த வகையில் தற்போது டிரம்ப் மகளுக்கான கைத்தறிப்புடவையையும் தேர்வு செய்யவிருப்பது சமந்தா தானாம்! இதற்காக சமந்தா சமீபத்தில் சிறந்த கைத்தறிப்புடவைகள் சிலவற்றைத் தேர்வு செய்து வைத்துள்ளாராம். அவற்றில் ஒன்றை அவர் இவாங்காவுக்கு பரிசளிக்கலாம். இவாங்காவும் ஒரு ஃபேஷன் டிசைனர் என்பதால் சமந்தா அளிக்கப்போகும் கைத்தறிப்புடவை பரிசு அவருக்குப் பிடித்தமானதாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரிடையே அதிகமிருக்கிறது.

பார்க்கலாம்... சமந்தா அளிக்கும் பரிசு இவாங்காவை அசத்துமா என!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT