செய்திகள்

சித்தார்த் - ஆண்ட்ரியா நடிக்கும் 'அவள்' பட டிரெய்லர்!

எழில்

நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள அவள் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

மிலிந்த் இயக்கத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா நடித்துள்ள படம் - அவள். இணை தயாரிப்பு - சித்தார்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. ஹிந்தியில் தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர் என்றும் தெலுங்கில் க்ருஹம் என்றும் தலைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. 

இந்தப் படம் மூலமாக தெலுங்கு மற்றும் ஹிந்தியில் மீண்டும் நடித்துள்ளார் சித்தார்த். 2013-க்குப் பிறகு சித்தார்த் இவ்விரு மொழிகளிலும் எந்தவொரு படமும் நடிக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக, குறிப்பாக ஜிகர்தண்டா படத்துக்குப் பிறகு வரிசையாகத் தமிழில் நடித்து வந்தார் சித்தார்த். இந்நிலையில் தற்போது மீண்டும் ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் நடிக்க முன்வந்துள்ளார். இயக்குநர் மிலிந்த், காதல் டூ கல்யாணம் என்கிற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படம் இதுவரை வெளிவரவில்லை.

நவம்பரில் வெளியாகவுள்ள அவள் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT