முகப்பு
செய்திகள்

விண்வெளி வீரராகப் பயிற்சி பெற நாசா செல்கிறார் மாதவன்!

ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கிறது விண்வெளி தொடர்பான ஒரு தமிழ்ப்படம்

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

விண்வெளி தொடர்பான முதல் தமிழ்ப்படமான டிக் டிக் டிக் ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து வெண்வெளியை மையமாக வைத்து இன்னொரு படம் உருவாக உள்ளது. இந்திப் படமான இதில் மாதவன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 

லாகூர் எனும் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குநர் சஞ்சய் புரான் சிங் சௌஹான் தான் இந்தப் புதிய விண்வெளிப் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு 'சந்தா மாமா தூர் கே’ (Chanda Mama Door Ke) என்று தலைப்பிட்டுள்ளனர். இரண்டு விண்வெளி வீரர்களைப் பற்றிய கதை இது என்று தெரிவித்துள்ளார்.

அந்த இரண்டு விண்வெளி நாயகர்களாக மாதவன் மற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத் (தோனி படப் புகழ்) ஆகியோர் நடிக்க உள்ளனர். விண்வெளி வீரர்களாக நடிப்பதால் அதற்கான சிறப்பு பயிற்சிகளைப் பெற விரும்பி சுஷாந்த் நாசாவில் பயிற்சி பெற்று வருகிறார்.

மாதவனும் விரைவில் அப்பயிற்சியைப் பெற நாசா செல்லவிருக்கிறாராம். இப்படத்தில் நவாசுதின் சித்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →