செய்திகள்

திருமணத் தேதிக்கு முன்னாலேயே மணப்பெண் ஆனாரா சமந்தா?!

DIN

சமந்தா வெவ்வேறு மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். ஆனால் இதற்கிடையே சமீபத்தில் மணமகள் தோற்றத்தில் விளம்பரப் படமொன்றில் நடித்துள்ளார். சொந்த வாழ்க்கையிலும் விரைவில் மணப்பெண்ணாகப் போகும் சமந்தாவின் இந்த அழகான தோற்றம் அதற்கான முன்னோட்டமாக அமைந்துவிட்டது. திருமண தினத்தன்று சமந்தா எப்படி இருப்பார் என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும்படியாக விதவிதமான மணப்பெண் ஆடைகளில் ஜொலித்தார் சமந்தா. 

சமந்தா நாக சைதன்யா ஜோடியின் திருமணம் அக்டோபரில் நடைபெறவுள்ளது. அதுவரை அவர்கள் இருவரும் ஒப்பந்தமாகிய படங்களில் நடித்து வருகின்றனர். ஒரு பக்கம் மணமகள் சமந்தா தமிழில் விஜயுடன் 'மெர்சல்' படத்திலும், தெலுங்கில் மாமனார் நாகார்ஜுனாவுடன் 'ராஜுகாரி கதி 2’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  இன்னொரு பக்கம், நாக சைதன்யாவின் சமீபத்திய படமான யுத்தம் சரணம் அவருக்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது.

சமந்தா தங்களுடைய காதல் விவகாரத்தை வீட்டில் தெரிவிக்காவிட்டால் ராக்கி கட்டிவிடுவேன் என்று பயமுறுத்தவே, அதனால்தான் உடனடியாக பெற்றோரிடம் சொல்லி திருமணத்துக்கு சம்மந்தம் வாங்கினேன் என்று நாகா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

'நாங்கள் 2009 -ம் ஆண்டில் 'ஏ மாயா சேஸாவே' படத்தில் நடிக்கும் போது காதலிக்கத் தொடங்கினோம். எங்கள் காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக போய்க் இருந்தது. சாம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்த போதும் வீட்டில் எங்கள் விஷயத்தைப் பற்றிப் பேசத் தாமதப்படுத்திக் கொண்டிருந்தேன். ஒரு நாள், நாங்கள் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தபோது, என் பெற்றோரிடம் காதல் விஷயத்தைச் சொல்லா விட்டால், எனக்கு 'ராக்கி' கட்டிவிடுவதாக சாம் பயம் காட்டினாள். எனக்கு ஒரே அதிர்ச்சி! வேறு வழியில்லாமல், உடனடியாக என் பெற்றோரிடம் எங்கள் காதலைப் பற்றி பேசி, திருமணத்துக்கு அவர்களது ஒப்புதல் கிடைத்தது’ என்று நாகா கூறினார்.

நாக சைதன்யா தற்போது பிரேமம் பட இயக்குனர் சந்து மந்தேட்டியின் இரண்டாவது படமான சாவ்யாசச்சியில் நடிக்கிறார். 
 
நாகா சமந்தாவின் திருமணம் முதலில் தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாகவும் அதன்பின் டெஸ்டினேஷன் வெட்டிங்காகாவும் இரண்டு வகையில் கொண்டாடடப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. திருமணம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த நட்சத்திர ஜோடி அவரவர் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு மீண்டும் வேலைக்குத் திரும்ப திட்டமிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT