செய்திகள்

ஷில்பா வேடத்தில் விஜய் சேதுபதி! ரசிகர்களை அசத்திய புகைப்படம்!

ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம், சமூகவலைத்தளத்தில்...

எழில்

ஆரண்ய காண்டம் புகழ் குமாரராஜா-வின் புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. இது குறித்த புதிய தகவல்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.  

முதலில் இப்படத்துக்கு அநீதிக் கதை என்று பெயரிடப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாமல், சூப்பர் டீலக்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதியின் பெண் வேடமிட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது ஷில்பா என்கிற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம், சமூகவலைத்தளத்தில் அதிகமாகப் பகிரப்பட்டது.

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி, நதியா, ஃபஹத் ஃபாசில், மிஸ்கின், சமந்தா, காயத்ரி, பகவதி போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு இசை - யுவன் சங்கர் ராஜா. ஒளிப்பதிவாளர்கள் - வினோத் & நிரவ் ஷா. இயக்குநர்கள் மிஷ்கின், நலன் குமாரசாமி, நீலன் சேகர் ஆகியோர் திரைக்கதையில் பணியாற்றியுள்ளார்கள். கதை - திரைக்கதை - வசனம் - இயக்கம் போன்ற பொறுப்புகளை குமாரராஜா ஏற்றுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT