முகப்பு
செய்திகள்

சிம்புவின் புதிய தோற்றம் இயக்குனர் மணி ரத்னம் படத்துக்காகவா?

சிம்பு சமீபத்தில் தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றியுள்ளார். அவரது புதிய மொஹாக்

Updated On : 24 செப்டம்பர் 2017, 1:25 pm IST
பகிர்:

சிம்பு சமீபத்தில் தன்னுடைய ஹேர்ஸ்டைலை மாற்றி இருக்கிறார். மொஹாக் (mohawk haircut) என்று அழைக்கப்படும் இந்த ஸ்டைலிஷ் ஹேர் கட்டில் சிம்புவின் புதிய தோற்றம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புதிய கெட்டப்பில் சிம்பு சற்று மெலிந்தும் காணப்படுகிறார். இந்த நியூ லுக்ஸ் அடுத்து சிம்பு நடிக்கவிருக்கும் இயக்குனர் மணிரத்னம் படத்திற்காக என்று கூறப்படுகிறது.  ஆனால் சமீபத்தில் வெளிவந்த மற்றொரு தகவலின்படி சிம்பு ஒரு ஆங்கில படத்தை இயக்கி நடிக்கவிருக்கிறாராம். அதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதால், அதற்காகத்தான் தன் தோற்றத்தை இப்படி மாற்றியுள்ளார், மேலும் அந்த ஆங்கிலப் படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் ஆரம்பித்து டிசம்பரில் முடியும் என்கிறது சிம்பு வட்டாரம். இயக்குனர் மணி ரத்னத்தின் படப்பிடிப்பு 2018 ஜனவரியில்தான் தொடங்கவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.