முகப்பு
செய்திகள்

அமெரிக்காவில் மட்டும் ரூ. 10 கோடி வசூலைப் பெற்று சாதனை செய்துள்ள அர்ஜுன் ரெட்டி!

கடந்த ஞாயிறு வரை அமெரிக்காவில் மட்டும் ரூ. 10.75 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது அர்ஜுன் ரெட்டி...

Updated On : 13 செப்டம்பர், 2017 at 4:06 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:23 PM

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு அர்ஜூன் ரெட்டி என்கிற மற்றொரு தெலுங்குப் படம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கியுள்ள படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்துள்ளதால் வசூலிலும் அசத்தி வருகிறது. 

இந்தப் படம் அமெரிக்காவில் மட்டும் ரூ. 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.  

அமெரிக்காவில் 'ஏ' சான்றிதழ் பெற்ற தெலுங்குப் படம் ஒன்று 1 மில்லியன் டாலர் வசூலைப் பெற்றது இதுவே முதல்முறை. இந்நிலையில் படத்தின் வசூல் தற்போது இந்திய மதிப்பளவில் ரூ. 10 கோடியைத் தாண்டியுள்ளது.

Advertisement

கடந்த ஞாயிறு வரை அமெரிக்காவில் மட்டும் ரூ. 10.75 கோடி வசூலித்து சாதனை செய்துள்ளது அர்ஜுன் ரெட்டி. அமெரிக்காவில் மிக வேகமாக 1 மில்லியன் டாலர் வசூலித்த சிறிய பட்ஜெட் படம் என்கிற பெருமையையும் பெற்ற அர்ஜுன் ரெட்டியின் வசூல் தொடர்ந்து சீராக உள்ளதால் மேலும் இரு வாரங்கள் நல்ல வசூலைப் பெறும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.