முகப்பு
செய்திகள்

நடிகை அமலாபால் திறந்து வைத்த பிரபல நகைக்கடை!

கோலிவுட்டில் ஷூட்டிங் இல்லாததால் நடிகர், நடிகைகள் சொந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Updated On : 11 ஏப்ரல், 2018 at 5:31 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:13 PM

கோலிவுட்டில் ஷூட்டிங் இல்லாததால் நடிகர், நடிகைகள் சொந்த வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். நடிகைகள் இந்த ப்ரேக்கை புதுவிதமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். குடும்பத்தாருடன் நேரம் செலவழிப்பதிலும், கடைத் திறப்பு விழாக்களுக்குச் செல்வதும், பிறமொழி திரைப்படங்களில் நடிப்பதும், நண்பர்கள் உறவினர்கள் வீடுகளுக்கு விசிட் அடிப்பதுமாக இந்த ப்ரேக்கை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்நிலையில் அண்மையில் நடிகை அமலா பால் சேலத்திலுள்ள ஜோஸ் அலூகாஸ் நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 

தமிழ், மலையாளம் தெலுங்கு என பல படங்களில் நடித்து வரும் அமலா பால் தென்னக திரையில் அதிக விமரிசனங்களுக்கு உள்ளானவர். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அதோ அந்த பறவை போல படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரைத்துறை போராட்டம் காரணமாக வெளிவராத நிலையில் உள்ளது.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள அந்த நகைக் கடையை திறந்து வைத்து, நிகழ்ச்சியில் பேசிய அவர், தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி கூறினார்.

Advertisement

இதனை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் அமலா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.