கருணாநிதி மறைவு எதிரொலி: யுவன் ஷங்கர் ராஜா படத்தின் வெளியீடு ஒருநாள் தள்ளிவைப்பு!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் - பியார் பிரேமா காதல்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் - பியார் பிரேமா காதல்.
பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஓய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டு இப்படத்தை இளன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர்ராஜா இசை.
இந்தப் படம் இன்று வெளிவருவதாக இருந்த நிலையில் கலைஞர் கருணாநிதியின் மறைவையொட்டி, அதற்கு மரியாதை செலுத்தும்விதமாக படத்தின் வெளியீட்டை ஒருநாள் தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பியார் பிரேமா காதல் படம் நாளை வெளியாகவுள்ளது.
Advertisement