சூர்யாவின் நடிப்பை வியந்து பாராட்டும் செல்வராகவன்!
நான் ஒரு நடிகருடன் இணைந்து மீண்டும் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினால் அவர் சூர்யா தான்...
எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் என்ஜிகே படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்கள்.
இந்நிலையில் சூர்யாவின் நடிப்பைப் பாராட்டி செல்வராகவன் ட்வீட் செய்துள்ளதாவது:
நான் ஒரு நடிகருடன் இணைந்து மீண்டும் பணியாற்ற வேண்டும் என்று விரும்பினால் அவர் சூர்யா தான். வாவ்... அவருடைய அபாரமான ஆற்றல் கண்டு வியக்கிறேன். கடமையுணர்வும் கடும் உழைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று பாராட்டியுள்ளார்.
என்ஜிகே படப்பிடிப்பு சமீபத்தில் நிறுத்திவைக்கப்பட்டது. இயக்குநர் செல்வராகவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. பிறகு அவர் உடல்நலம் தேறியதால் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் படம் தீபாவளிக்குத் திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.