தமிழில் அறிமுகமாகிறார் அமிதாப் பச்சன்: எஸ்.ஜே. சூர்யாவுடன் இணையும் படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு
தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகவுள்ள உயர்ந்த மனிதன் என்கிற படத்தில் அமிதாப் பச்சனும் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கவுள்ளார்கள்...
ஒரே படத்தில் இரு புதிய பயணங்கள்.
இத்தனை வருடங்கள் நடித்தாலும் இப்போதுதான் முதல்முறையாக தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளார் அமிதாப் பச்சன்.
முதல்முறையாக ஹிந்திக்குச் செல்லவுள்ளார் எஸ்.ஜே. சூர்யா.
தமிழ், ஹிந்தி மொழிகளில் உருவாகவுள்ள உயர்ந்த மனிதன் என்கிற படத்தில் அமிதாப் பச்சனும் எஸ்.ஜே. சூர்யாவும் நடிக்கவுள்ளார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை தமிழ்வாணன் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு எஸ்.ஜே. சூர்யா, நயன்தாரா நடித்த கள்வனின் காதலி படத்தை இயக்கியவர். இப்படத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு பட போஸ்டரையும் வெளியிட்டுள்ளார் ரஜினி.
படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட இதர தகவல்கள் விரைவில் வெளியிடப்பட்டுள்ளன.