அமேஸான் பிரைமில் ஒளிபரப்பாகும் முதல் தமிழ் வெப் சீரிஸ்!
தமிழ்த் தொடர்களை ஒளிபரப்ப அமேஸான் பிரைம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
தமிழ்த் தொடர்களை ஒளிபரப்ப அமேஸான் பிரைம் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
டிசம்பர் 7 முதல் அமேஸான் பிரைமில் தொடங்கும் வெள்ள ராஜா என்கிற வெப் சீரிஸில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடிக்கிறார். பார்வதி நாயர், காயத்ரி சங்கர், காளி வெங்கட் போன்றோரும் நடித்துள்ளார்கள். அமேஸான் பிரைமில் ஒளிபரப்பாகும் முதல் தமிழ்த் தொடர் இது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தத் தொடரை குகன் சென்னியப்பன் இயக்கியுள்ளார்.
வீடியோ ஸ்ட்ரீமிங் மூலமாகப் படங்கள் மற்றும் இணையத் தொடர்களைப் பார்க்க வசதியை ஏற்படுத்தித் தருகிறது அமேஸான் பிரைம் செயலி. இதற்கென தனிக்கட்டணங்கள் உண்டு. டெஸ்க்டாப் கணினி, ஸ்மார்ட்போன், டேப்ளெட் பிசி போன்றவற்றைப் பயன்படுத்தி அமேஸான் பிரைம் விடியோக்களைக் காணமுடியும்.